தரமே எமது தாரக மந்திரம்!

       ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டுவரும் எமது நிறுவனமானது யாழ்ப்பாணம், கோப்பாயினைத் தலைமையிடமாகக் கொண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு பெண்களுக்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.

இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஆண்டிற்கு சுமார் 4.4 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும். அவை ‘‘மிகவும் மதிப்புமிக்க, அனைவரும் அடையாளம் காணக்கூடிய விதத்தில் நெய்யப்பட்ட இந்த ஆடைகள்’’ இந்த பிராந்தியத்தில் மற்ற இடங்களில் உள்ளவர்களைவிட மிகவும் சிறந்த முறையில் படித்த மற்றும் திறமைமிகு தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப் பட்டவைகளாகும் என சன் ஏடு அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதின் பின் பொருளாதார ரீதியில் பின்னடைவினை சந்தித்துள்ள வடக்கு மாகாணத்தில் குறிப்பாக எமது மாவட்டத்தில் ஆடை உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் வேலைவாய்ப் பற்றோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கிலும் இவ் ஆடை உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

அதனடிப்படையில் ஆயத்த ஆடைத் தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் கணவனை இழந்த பெண்கள் மற்றும் அங்கவீனர்களுக்கு வேலைவாய்பினை வழங்குகிறது.

முதல் கட்டமாக 10 பேர்கள் ஆயத்த ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தித் தேவை அதிகமாக உள்ளதால் தொடர்ந்து எம்மவர்களுக்கு வேலைவாய்பினை வழங்க முடியும். முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு இயங்கும் எமது நிறுவனம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளை உற்பத்தி செய்வதில் முன்னிலை பெற்று வருகிறது.

தனியார் நிறுவனமாகிய பசுமை உற்பத்தி நிலையத்தின் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தாயகத்தின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதுடன் நலிவுற்றோர் வாழ்வில் ஒளியேற்ற உங்களாலான பங்களிப்பினை வழங்க முடியும்.

வறுமையை ஒழிப்போம்!  வாழ்வில் ஒளியேற்றுவோம்!
Web develepment & Maintanenced by: Bestworks