எம்மைப் பற்றி

நோக்கக் கூற்று

  வறுமைக் கோட்டின்கீழ் உள்ளவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆயத்த ஆடை உற்பத்தியினையும் அதன் கலையையும், அதனுடன் தொடர்புடைய அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பற்றியும் எமது இளைஞர் யுவதிகளுக்குக் கற்பித்தல் - தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல்.

பணிக்கூற்று

    நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிப்படைந்த குடும்பத்தினர், பாடசாலையை விட்டு வெளியேறிய மற்றும் கல்வியைத் தொடர முடியாத மாணவ மாணவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக செயல்பட்டு பணியாளர்களுக்கு வருமான வாய்ப்பினை ஏற்படுத்துதல்.


       இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்கு அடுத்தபடியாக ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான வருவாயாக விளங்கியது. ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதிக்கின்றது. இந்தத் துறையில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்தும் வருகின்றனர்.

2009 மேக்குப் பின்னான காலப் பகுதியில் ஆடை உற்பத்தித்துறை இலங்கையில் புத்துயிர் பெற்று வருகிறது. மாவட்டங்கள் தோறும் ஆடை உற்பத்தித் தொழிற் சாலைகள் நிறுவி அதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினைக்கு மாவட்டங்கள் தோறும் ஓரளவு தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளதெனக் கூறலாம். 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் பட்டதனால் மாவட்டங்கள் தோறும் பெருமளவு இளைஞர்களும் யுவதிகளும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றனர்.

ஆடை ஏற்றுமதியில் இலங்கை, யாரும் எதிர்பாராத விதமாக வளர்ச்சியடைந்ததைக் கண்டு அண்டைய நாடுகளும் அதிர்ச்சியடைகின்றன. குறிப்பாகச் சொன்னால் ஆடை ஏற்றுமதித் துறையில் ஏகபோகத்தைக் கொண்டிருந்த நாடுகளுக்கு இலங்கை போட்டியாக களத்தில் உருவெடுத்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 3 சகாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப்போர் சீரழித்த எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் வடக்கு மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், ஆடை உற்பத்தியில் எமது இளைஞர் யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டதே பசுமை உற்பத்தியகம்.

இலங்கையில் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா சுமார் 10 வீதத்தை கொள்வனவு செய்கிறது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள் மிகுதியைக் கொள்வனவு செய்கின்றன. எமது நிறுவனமும் வடக்கிலிருந்து குறிப்பாக பெண்களுக்கான ஆயத்த ஆடைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் உற்பத்தி் செய்து இலங்கை முழுவதும் விநியோகித்து வருகிறது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய கடுமையாக முயன்று வருகிறது.

எமது உள்ளூர் உற்பத்தியினை ஏதாவதொரு விதத்தின் தாங்குவதன் மூலம் பசுமை உற்பத்தியகத்தின் கரங்களை வலுப்படுத்தி எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில் கொடுக்கும் நிறுவனமாக மாற்ற உங்கள் ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.

எமது உழைப்பின் மூலம் மட்டுமே சிறந்த உற்பத்தியை உருவாக்கக் கூடியதாக இருக்கும். எனவே தரமான உற்பத்தியை கொடுக்க, அர்ப்பணிப்பு தன்மையும் கடினமான உழைப்பையும் கொடுக்க வல்ல இளைஞர் யுவதிகளை பசுமை உற்பத்தியகம் வரவேற்கக் காத்திருக்கிறது.

Web develepment & Maintanenced by: Bestworks